ஆயிரம் ரூபா சம்பள உயர்வு தொடர்பாக தோட்ட நிறுவன அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

ஆயிரம் ரூபா சம்பள உயர்வு தொடர்பாக தோட்ட நிறுவன அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!


பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா நாளாந்த சம்பளத்தை வழங்காத தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.


ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்காத தோட்ட நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு, அபராதம் மற்றும் 6 மாத சிறைத்தண்டனை வழங்கப்படும் என்று தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.


இம்மாதம் 05ஆம் திகதி தொடக்கம் செல்லுபடியாகும் வகையில் பெருந்தோட்டத் தொழிலார்களுக்கு நாளாந்த சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கான விசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.


$ads={1}


தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச நாளாந்த சம்பளமாக 900 ரூபாவும், வரவு செலவுத்திட்ட சலுகை கொடுப்பனவாக 100 ரூபாவும் வழங்கப்படவுள்ளன என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.