போதைப்பொருள் குற்றத்தில் கைதான நபர் இஸ்லாமிய பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்!

போதைப்பொருள் குற்றத்தில் கைதான நபர் இஸ்லாமிய பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்!


பொலிஸாரின் காவலில் உள்ள சந்தேகநபரொருவர், இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பிற்கு நிதியுதவியளித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.


பாணந்துறை, கெசல்வத்தையைச் சேர்ந்த 34 அகவையைக்கொண்ட இந்த சந்தேகத்துக்குரியவர் சில மாதங்களுக்கு முன்னர் போதைப்பொருள் குற்றத்தில் கைது செய்யப்பட்டார்.


இந்நிலையில், ஐக்கிய அரபு இ ராச்சியத்தின் துபாயிலிருந்து அவரின் தனிப்பட்ட கணக்கில் பெரும் தொகை பணம் கிடைத்துள்ளமை தெரியவந்துள்ளது.


இதனையடுத்து அவர், இலங்கையில் உள்ள இஸ்லாமிய தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் ஒரு அமைப்புக்கு பணத்தின் ஒரு பகுதியை வழங்கியதாகவும் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளதாக அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.


இந்த வெளிப்படுத்தலை அடுத்து சந்தேகத்துக்குரியவர் மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத புலனாய்வு பிரிவிடம் கையளிக்கப்பட்டுள்ளார்.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.