மாவனெல்லை - மா ஓயாவில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

மாவனெல்லை - மா ஓயாவில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!


மாவனெல்லை - மா ஓயாவில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.


மா ஓயாவில் இன்று பிற்பகல் 07 பேர் நீராடச்சென்றுள்ள நிலையில், அவர்களில் இருவர் இவ்வாறு நீரில் மூழ்கி உயிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


இந்நிலையில், உயிரிழந்தவர்களின் சடலங்கள் மாவனெல்லை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த சடலங்களை பிரேத பரிசோதனைகளுக்குட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் கூறியுள்ளார்.


மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவனெல்லை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


இதேவேளை, ஆறு மற்றும் குளங்களில் நீராடச் செல்லும் போது மிகவும் அவதானமாக செயற்படுமாறு பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன அறிவுறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.