மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டாம்! ஜனாதிபதிக்கு பௌத்த தேரர்கள் கடிதம்!

மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டாம்! ஜனாதிபதிக்கு பௌத்த தேரர்கள் கடிதம்!


மாகாண சபைத் தேர்தலுக்கு எதிராகப் பௌத்த தேரர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.


இலங்கையில் தற்போதிருக்கும் சூழ்நிலையில் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டாம் என தெரிவித்து முக்கிய பௌத்த தேரர்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளனர்.


முருத்தெட்டுவே ஆனந்த தேரர், கசப்ப தேரர், விமலஜோதி தேரர் உட்பட பல தேரர்களின் கையொப்பத்துடன் இந்தக் கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


இதேவேளை,மாகாண சபை முறைமை இலங்கைக்கு பொருத்தமற்றது, மாகாண சபை தேர்தலை நடத்தும் தீர்மானத்தை அரசாங்கம் கைவிட வேண்டும். இல்லாவிடின் மகா சங்கத்தினரை ஒன்றினைத்து போராட்டத்தில் ஈடுப்படுவோம் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post