பொதுபல சேனா அமைப்பை தடை செய்யப்போவதில்லை; ஆனால் மதரஸாக்கள் குறித்து கவனம் செலுத்துவோம்! -ஜீ.எல் பீரிஸ்
advertise here on top
advertise here on top

பொதுபல சேனா அமைப்பை தடை செய்யப்போவதில்லை; ஆனால் மதரஸாக்கள் குறித்து கவனம் செலுத்துவோம்! -ஜீ.எல் பீரிஸ்

பொதுபல சேனா அமைப்பை தடை செய்யப்ப்போவதில்லை; ஆனால் மதரஸாக்கள் குறித்து கவனம் செலுத்துவோம்! -ஜீ.எல் பீரிஸ்

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரையில் குறிப்பிட்டுள்ள அனைத்து விடயங்களையும் நாம் நடைமுறைப்படுத்த மாட்டோம். அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதன்படி "பொதுபல சேனா அமைப்பை நாம் தடை செய்ய மாட்டோம்" என அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.


பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பின்போது கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,


‘ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையை முழுமையாக வாசிக்காமல் சிலர் குறை கூறுகின்றனர். ஆணைக்குழுவின் பரிந்துரையில் கூறப்பட்டுள்ள அனைத்து விடயங்களையும் நாம் நடைமுறைப்படுத்த மாட்டோம்.


அதில் ஒன்றை குறிப்பிட்டுக் கூறுவதென்றால், சிங்கள பெளத்த அமைப்பான பொதுபல சேனா அமைப்பை தடை செய்யக்கோரி ஜனாதிபதி ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதில் அவ்வாறு கூறப்பட்டிருப்பினும் பொதுபல சேனா அமைப்பை நாம் தடை செய்ய போவதில்லை. ஆனால் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள இஸ்லாமிய போதனைகளை நடத்தும் மத்ரஸா பாடசாலைகள் தொடர்பில் நாம் கவனம் செலுத்துவோம்” என்றார்.


மத்ரஸா பாடசாலைகளை கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கான முழுமையான அதிகாரம் அரசாங்கத்துக்கும் கல்வி அமைச்சுக்கும் உண்டு என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


$ads={1}


“மத்ரஸா பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகள், பாட விதானங்கள் குறித்து ஆழமாக ஆராய்ந்து, அவற்றை நடைமுறைப்படுத்துவது குறித்து முடிவு எடுப்போம். மத்ரஸா பாடசாலைகளை கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கான முழுமையான அதிகாரம் அரசாங்கத்துக்கும் கல்வி அமைச்சுக்கும் உண்டு என்றும் அவர் தெரிவித்தார்.


-எம்.எம்.சில்வெஸ்டர்


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.