
அதேபோல், பிரான்ஸிலிருந்து டுபாய் ஊடாக இலங்கை வந்த பொதி ஒன்றை சோதனை செய்த போதும் 4,360 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன. கடந்த வருடம் டிசம்பர் 27ஆம் திகதி இலங்கைக்கு இவை அனுப்பப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பொதிகளும் போலியான முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற பொதிகள் தொடர்பில் அவதானமாக இருப்பதுடன்,புதிய வகை போதைப்பொருட்கள் நாட்டுக்குள் கொண்டு வரப்படுவதை தடுக்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.