தந்தை மற்றும் இரு மகன்களின் உயிரைப் பறித்த கொடூர விபத்து!

தந்தை மற்றும் இரு மகன்களின் உயிரைப் பறித்த கொடூர விபத்து!

கிளிநொச்சி - பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இத்தாவில் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த சிறுவர்களின் தந்தையும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் வாகனம், இத்தாவில் பகுதியில் அதற்கு நேரெதிரே பயணித்த டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

வீதியை விட்டு விலகிய டிப்பர் வாகனம், மோட்டார் வாகனத்துடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்தில் பளை - தர்மங்கேணி பகுதியை சேர்ந்த சற்குணம் சாருஜன், சற்குணம் சாரங்கன் என்ற 9 மற்றும் 12 வயதுகளை உடைய சிறுவர்கள் இருவரே உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் படுகாயம் அடைந்த சிறுவர்களின் தந்தை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.