வீரவன்ச ஒரு குப்பை மேடு என்பதை அவர் செயல் மூலம் நிரூபித்துள்ளார்! -நளிந்த ஜயதிஸ்ஸ

வீரவன்ச ஒரு குப்பை மேடு என்பதை அவர் செயல் மூலம் நிரூபித்துள்ளார்! -நளிந்த ஜயதிஸ்ஸ

விமல் வீரவங்ச ஒரு குப்பை மேடு என்பதை அவர் செயல் மூலம் நிரூபித்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.


விமல் வீரவங்ச மீண்டும் மக்கள் விடுதலை முன்னணியில் இணையும் வாய்ப்புள்ளதா எனச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே ஜயதிஸ்ஸ இதனைக் கூறியுள்ளார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,


தவறுகளைத் திருத்திக் கொள்ளும் எவரும் மக்கள் விடுதலை முன்னணியுடன் மீண்டும் இணைய முடியும்.


$ads={1}


எனினும் கட்சியின் தலைமைக்குச் சவால் விடுத்தால், அது கட்சியில் இணைத்துக் கொள்வதற்கான காரணமாக அமையும். 1965 ஆம் ஆண்டு கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து மக்கள் விடுதலை முன்னணியில் அங்கம் வகித்த இரண்டு பொதுச் செயலாளர்கள் விலகிச்சென்றனர்.


விலகியவர்கள் மீண்டும் கட்சிக்கு வந்து கட்சியில் உரிமை இருக்கின்றது என்று கூறினால், அதனை ஏற்க முடியாது எனவும் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.