
புத்தளம் - கற்பிட்டி, எத்தாலை பகுதியில் உள்ள வீதியோர வேளாங்கண்ணி சிலையின் பாதுகாப்பு கண்ணாடிகளை உடைத்த சந்தேகத்தில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
அவர் தீவிரவாத பார்வையை கொண்டிருப்பவராக அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டார தகவல்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
விசாரணையின் போது, சிலைகளை வணங்குவதை நிராகரித்ததாலும், உலகின் ஒரே மதமாக முஸ்லிம் மதம் மட்டுமே இருக்க வேண்டும் என்று நம்பியதாலும் தான் இதைச் செய்ததாக சந்தேக நபர் தெரிவித்ததாக அந்த செய்திகள் குறிப்பிடுகின்றன.
சந்தேகநபர் தடைசெய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் செயற்பாட்டாளர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.