நாடாளுமன்ற அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்களின் கல்வித் தகைமைகள் தொடர்பான தகவல் வழங்க மறுப்பு!

நாடாளுமன்ற அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்களின் கல்வித் தகைமைகள் தொடர்பான தகவல் வழங்க மறுப்பு!


பாராளுமன்ற அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகைமைகள் தொடர்பான தகவல்களை வெளியிட தனியுரிமை மீறல் என காரணம் காட்டி பாராளுமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது என தி சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.


சண்டே டைம்ஸ் தாக்கல் செய்த RTI எனப்படும் தகவல் அறியும் உரிமை விண்ணப்பத்திற்கு பதிலளிக்கும் விதமாக நாடாளுமன்றத்தின் உதவி பொதுச்செயலாளரும் தகவல் அதிகாரியுமான டிக்கிரி ஜயதிலக, 


"கல்வித் தகுதிகள் தனிப்பட்ட தகவலுடன் தொடர்புடையவை, அவை வெளிப்படுத்தப்படுவது எந்தவொரு பொது நடவடிக்கையுடனும் தொடர்பில்லை. அத்தகைய தகவல்களை வெளியிடுவதற்கு சம்பந்தப்பட்ட நபர் அத்தகைய வெளிப்படுத்தலுக்கு எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் அளிக்க வேண்டும். ” என்றார்.


மேலும், இலங்கை அரசியலமைப்பின் 90 வது பிரிவின்படி, ஒரு எம்.பி.யின் கல்வித் தகுதிகள் குறித்து எந்தக் குறிப்பும் குறிப்பிடப்படவில்லை என்றும், அரசியலமைப்பின் படி, ஒரு எம்.பி.யாக தேர்ந்தெடுக்க அவர் ஒரு வாக்காளராக மாத்திரம் இருந்தால் போதும் என்று சுட்டிக்காட்டினார்.'


-எம்.எம் அஹமத்


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.