
பொலிஸ் அவசரநிலை பதிலளிப்பு பிரிவுக்கு கிடைத்த தகவல்களின்படி, 27500 லிட்டர் தேங்காய் எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இரண்டு பவுசர்களின் ஓட்டுநர்களும் கைது செய்யப்பட்டுள்ளதோடு, மேலும் தேங்காய் எண்ணெய் ராகமை பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தன்கொட்டுவ நகருக்கு அருகிலுள்ள எண்ணெய் ஆலையில் நிறுத்தப்பட்டிருந்தபோதே இவ்வாறு பொலிசாரால் கைது செய்யப்பட்டது.
சந்தேகத்திற்கிடமான எண்ணெய் இனை, ஆய்வாளரிடம் பரிந்துரைக்கப்பட்டு ஒரு அறிக்கை பெறப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு பவுசர்களும் “எதிரிசிங்க எடிப்ல் ஒய்ல்” நிறுவனத்திற்கு சொந்தமானவை என்றும் குறித்த நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியவை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.