அரசியல் கட்சிகளை விசாரிக்க விரைவில் நியமிக்கப்படவுள்ள குழு!

அரசியல் கட்சிகளை விசாரிக்க விரைவில் நியமிக்கப்படவுள்ள குழு!


பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மத அல்லது இன அடிப்படையில் பெயரிடப்பட்டுள்ளனவா என்பதைக் கண்டறிந்து அறிக்கை அளிக்க மேலதிக தேர்தல் ஆணையாளர் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழுவை நியமிக்க தேர்தல் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.


தேர்தல் ஆணைக்குழுவின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் அரசியலமைப்புகளில் மத அல்லது இன விஷயங்கள் தொடர்பான உட்பிரிவுகள் அடங்கியுள்ளனவா? என்பதை இந்தக்குழு ஆராயும்.


குழுவின் பணியை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் செயலாளர் மற்றும் ஆணையத்தின் மற்றொரு உறுப்பினர் ஆகியோர் மேற்பார்வையிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.