முகம்மது நபியின் கார்டூன்களை வகுப்பில் காட்டிய ஆசிரியர்! பாடசாலைக்கு முன் பரபரப்பு!

முகம்மது நபியின் கார்டூன்களை வகுப்பில் காட்டிய ஆசிரியர்! பாடசாலைக்கு முன் பரபரப்பு!

இங்கிலாந்திலுள்ள பாடசாலை ஒன்றில், ஆசிரியர் ஒருவர் முகமது நபியின் கார்டூன்களை வகுப்பில் காட்டியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

Batley என்ற இடத்திலுள்ள பாடசாலை ஒன்றில் புதிதாக சேர்ந்துள்ள ஆசிரியர் ஒருவர் முகம்மது நபியின் கார்ட்டூன்களை வகுப்பில் காட்டியதாக கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து பாடசாலையில் பயிலும் இஸ்லாமிய மாணவர்களின் பெற்றோர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாடசாலையின் முன் கூடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பெற்றோர்கள் மட்டுமின்றி அப்பகுதியிலுள்ள மசூதிகளிலுள்ளவர்களும் அங்கு கூடியதால் பிரச்சினை ஏதும் ஏற்படாமல் தவிர்ப்பதற்காக அங்கு பொலிசார் குவிக்கப்பட்டனர்.

குறிப்பிட்ட ஆசிரியர் மிகவும் உத்வேகமுள்ள ஆசிரியர் என்றும், பாடசாலையில் கல்வி பயிற்றுவிப்பதை விரும்பி செய்பவர் என்றும் கூறப்படுகிறது.

நிர்வாகம் அவரை பணியிடை நீக்கம் செய்துள்ள நிலையில், பெற்றோரோ, அவரை நிரந்தரமாக பணி நீக்கம் செய்ய கோரி வருகின்றனர்.

பாடசாலைக்கு முன் குவிந்துள்ள பெற்றோரில் ஒருவர், அந்த ஆசிரியரின் படத்தை சமூக ஊடகங்களில் வெளிட்டதைத் தொடர்ந்து அவருக்கு பொலிஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கல்வித்துறை செயலரான Gavin Williamson, அந்த ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.