கணினி பட்டப்படிப்பிற்கு 10 ஆயிரம் மாணவர்கள் இணைத்துக் கொள்ள முடிவு! எந்த பாடப்பிரிவில் சித்தியடைந்திருந்தாலும் விண்ணபிக்கலாம்!

கணினி பட்டப்படிப்பிற்கு 10 ஆயிரம் மாணவர்கள் இணைத்துக் கொள்ள முடிவு! எந்த பாடப்பிரிவில் சித்தியடைந்திருந்தாலும் விண்ணபிக்கலாம்!


கணினி அறிவியல் (Computer Science) பட்டப்படிப்பிற்காக இம்முறை 10 ஆயிரம் மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். இவர்கள் ஒரே தடவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழங்கள் மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

க.பொ.த உயர்தர பரீட்சையில் எந்தவொரு பாடப்பிரிவிலும் சித்தியடைந்த மாணவர்கள் இந்த பட்டப்படிப்பிற்காக விண்ணப்பிக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

திறந்த பல்கலைக்கழகத்துடன் இணைந்த வகையில், இப்பட்டப்படிப்பு முன்னெடுக்கப்படுமென பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.

தற்போது, நாட்டில் கணினி அறிவியல் துறையுடன் தொடர்புடைய 40 ஆயிரம் வேலைவாய்ப்புகள் காணப்படுவதாகவும் அவர் கூறினார்.

இதற்கமைய, தற்போது பட்டப்படிப்பில் இணைத்துக் கொள்ளப்படுபவர்களுக்கு இந்த வேலைவாய்ப்புகளை வழங்க தீர்மானித்துள்ளதாகவும் பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டார்.

முதலாம் ஆண்டிலிருந்தே வேலைவாய்ப்புகள் வழங்கப்படுவதுடன், மாணவர்கள் பாடநெறியை தொடர்ந்தும் முன்னெடுக்க முடியுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.