ஈஸ்டர் தாக்குதல்; விசாரணை ஆணைக்குழு மற்றும் அரசாங்கம் இடையிலான நிலைப்பாட்டில் வேறுபாடு உள்ளது! -கல்வி அமைச்சர்

ஈஸ்டர் தாக்குதல்; விசாரணை ஆணைக்குழு மற்றும் அரசாங்கம் இடையிலான நிலைப்பாட்டில் வேறுபாடு உள்ளது! -கல்வி அமைச்சர்


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு தாக்குதலை மேற்கொண்டவர்களிற்கான தண்டனைகளை தீர்மானிப்பதற்கான அதிகாரமில்லை என அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.


ஈஸ்டர் ஞாயிறு ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது; கூடிய விரைவில் பொதுஜன பெரமுன தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி ஆணைக்குழுவின் நிலைப்பாட்டிற்கும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கும் வேறுபாடுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.


ஆணைக்குழுவிற்கு நீதித்துறை அதிகாரங்கள் இல்லாததால் அது தண்டனைகளை பரிந்துரை செய்ய முடியாது. ஆணைக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் சட்டமா அதிபர் குற்றச்சாட்டுகளை சுமத்துவார்; நீதிமன்றமே தண்டனைகளை தீர்மானிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.


$ads={1}


குறிப்பிட்ட அறிக்கையின் அடிப்படையில் சட்டமா அதிபர் திணைக்களமும் சிஐடியினரும் தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளன என தெரிவித்துள்ள கல்வியமைச்சர் அறிக்கை முழுமையானதில்லை ஆனால் முக்கியமானது என குறிப்பிட்டுள்ளார்.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.