கடையில் கடன் பெற்ற கொப்பியை அழிக்க கடைக்கே தீ வைத்த நபர் கைது!

கடையில் கடன் பெற்ற கொப்பியை அழிக்க கடைக்கே தீ வைத்த நபர் கைது!


களுத்துறை, தர்கா நகர் பகுதியில் கடைக்கு தீ வைத்த சந்தேகநபரை பொலிஸார் கைது செய்தள்ளனர்.


யடடொல வீதியில் உள்ள ஆதிகரிகொட பகுதியில் உள்ள ஒரு கடைக்கு நேற்று (10) அதிகாலை தீ வைக்கப்பட்டது. நேற்று மாலை சந்தேகபர் கைதானார்.


எரிவாயு சிலிண்டர்கள் தீப்பற்றியதால் வர்த்தக நிலையத்திற்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. பொலிசார், பொதுமக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.


வர்த்தகருக்கு சுமார் 2.5 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டது.


கடையின் பின்பகுதியில் ரோர்ச் லைட், தீப்பெட்டி என்பன மீட்கப்பட்டன. அதை தடயப்பொருளாக வைத்து பொலிஸார் சோதனையிட்டனர். பொலிஸ் மோப்பநாய் மூலம், அந்த பகுதியில் வசிக்கும் 35 வயதான ஒருவரை பொலிஸார் கைது செய்தனர்.


$ads={1}


கடைக்கு தீ வைத்த குற்றச்சாட்டை அவர் ஏற்றுக்கொண்டார்.


கடையிலிருந்து பொருட்களை கடன் வாங்குவதாகவும், அந்த தொகை அதிகரித்து விட்டதால், பணத்தை செலுத்த முடியாத நிலையில், கடன் கொப்பியை அழிக்கும் நோக்கத்துடன் கடைக்கு தீ வைத்ததாக தெரிவித்துள்ளார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post