📷 காடழிப்புக்கு எதிராக எழுப்பப்பட்ட ஓவியங்களுக்கு பொலிசார் செய்த வேலை!

📷 காடழிப்புக்கு எதிராக எழுப்பப்பட்ட ஓவியங்களுக்கு பொலிசார் செய்த வேலை!

மஹிந்த ராஜபக்ச நெலும் பொகுன மண்டபத்திற்கு முன்னால் விஹாரமாதேவி பூங்காவில் இன்று (19) அமைக்கப்பட்டிருந்த சூழல் நட்பு சுவரோவியத்தினை சுற்றுச் சூழல் பொலிசார் அகற்றியுள்ளனர்.  

சர்வதேச காலநிலை நடவடிக்கைக்கான தினத்தினை முன்னிட்டு வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கய்தின் இளைஞர் பிரிவு குறித்த ஓவியத்தினை வரைந்து காட்சிப்ப்டுத்தினர்.

இது வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் இளைஞர் பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட உலகளாவிய காலநிலை விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும்.

இலங்கை முழுவதும் முன்னோடியில்லாத வகையில் சுற்றுச்சூழல் பேரழிவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த பிரச்சாரம் ஏற்பாடு செய்யப்பட்டது.

கொழும்பு நகர சபையின் ஒப்புதல் பெற்ற பின்னரே, வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் இளைஞர் பிரிவு அந்த இடத்தில் சுவரோவியங்களை காட்சிப்படுத்த ஏற்பாடு செய்திருந்தது.

இருப்பினும், சுற்றுச்சூழல் பொலிஸ் பிரிவின் தலைவர் சம்பவ இடத்திற்குச் விரைந்து சென்று, இவ்வோவியங்கள் அனுமதியின்றி காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறி சுவரோவியத்தை அகற்றியதாகக் கூறப்படுகிறது.

இதன் விளைவாக, சுற்றுச்சூழல் பொலிஸ் பிரிவு சுவரோவியத்தை முழுவதுமாக அகற்ற நடவடிக்கை எடுத்தது. 

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.