திறமைக்கு இடம்; பிரதமரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள ஓர் விசேட திட்டம்!

திறமைக்கு இடம்; பிரதமரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள ஓர் விசேட திட்டம்!


தொழில்முறை திறன்கள் நிறைந்த சிறந்த நாட்டை உருவாக்குவதே தமது எதிர்பார்ப்பாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (02) இடம்பெற்ற  “SKILLS SRI LANKA” எனும் தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைத்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பரீட்சைகளில் சித்தியடையத் தவறும் மாணவர்கள் மனரீதியான பாதிப்புக்கு ஆளாவதன் காரணமாக அவர்களின் திறமைகளுக்கு உரிய இடம் கிடைக்காத நிலை காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், பரீட்சைகளில், சித்தியடடைந்தவர்களாக இருந்தாலும் சித்தியடையாத மாணவர்களாக இருந்தாலும் வாழ்க்கையில் வெற்றி பெற்ற பலர் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக இந்த நிலை தொடர்பில் அறிந்து தொழில் கல்விக்கான சீர்திருத்தங்களை முன்வைத்து செயற்படுத்திவருவதாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

$ads={1}

அத்துடன், ‘வாழ்க்கைக்கு ஒரு திறன் – திறனுக்கான வேலைவாய்ப்பு’ என்ற எண்ணக்கருவிற்கமைய, தாம் திறமைக்கு முன்னுரிமை வழங்கியதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக நாட்டின் தொழில் கல்வியை மேலும் முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.