கம்பஹா பகுதியில் சுமார் ஒரு இலட்சம் மலட்டு நுளம்புகள் விடுவிப்பு!

கம்பஹா பகுதியில் சுமார் ஒரு இலட்சம் மலட்டு நுளம்புகள் விடுவிப்பு!


கம்பஹாவில் உள்ள கிடகம்முல்ல பகுதியில் நேற்று (29) ஒரு இலட்சம் மலட்டு ஆண் டெங்கு நுளம்புகளை சுற்றுச்சூழலுக்கு விடுவிக்கும் சிறப்பு முயற்சி துவங்கி வைக்கப்பட்டது.


டெங்கு நுளம்புகளின் இனப்பெருக்கத்தினை குறைப்பதற்காக இந்த திட்டம் செயல்முறைப்படுத்தப்பட்டது.


இந்த முயற்சி களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மற்றும் தேசிய டெங்கு தடுப்பு பிரிவு மேற்கொண்ட பல ஆண்டு ஆராய்ச்சிகளின் அடிப்படையில் அமைந்திருந்தது.


இலங்கையில் டெங்கு தடுப்பு நடவடிக்கையில் இந்த மலட்டு டெங்கு நுளம்புகளை விடுவிப்பது ஒரு முக்கிய நிகழ்வு என்று தேசிய டெங்கு தடுப்பு பிரிவின் இயக்குனர் வைத்தியர் அருண ஜயசேகர தெரிவித்தார்.


ஆண் நுளம்புகளை கருத்தடை செய்வதன் மூலம் டெங்கு நுளம்புகளின் இனப்பெருக்கத்தினை  தடுக்கலாம் என்று அவர் விளக்கினார்.


களனி மருத்துவ பீடத்தால் செயல்படுத்தப்பட்ட திட்டம் நாட்டின் டெங்கு தடுப்பு நடவடிக்கைக்கு மிகவும் உதவுகிறது என அவர் மேலும் கூறினார்.


-எம்.எம். அஹமத்


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post