ஐ.நா மனிதவுரிமை பேரவையினால் எமக்கு எதிராக பெரும்பான்மை வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியாமல் போனது சந்தோசம் அளிக்கிறது! -வெளிவிவகார அமைச்சர்

ஐ.நா மனிதவுரிமை பேரவையினால் எமக்கு எதிராக பெரும்பான்மை வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியாமல் போனது சந்தோசம் அளிக்கிறது! -வெளிவிவகார அமைச்சர்


இலங்கை தொடர்பாக கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவையினால் பெரும்பான்மை வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியாமல் போனது எமது நாட்டுக்கு மிக்க சந்தோசம் அளிப்பதாக வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.


கொழும்பில் இன்று (23) இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவர் அங்கு உரையாற்றுகையில்,

“மனிதவுரிமை பேரவையின் முதன்மையான விதிகளுக்கு அப்பாற்பட்டு, செயற்படுவதற்கு பேரவைக்கு முடியாது. மனித உரிமை பேரவையின் பிரதான கொள்கைகளுக்கு அப்பாற்பட்டு அதனால் செயற்பட முடியாது. 

ஒரு நாட்டுக்கு எதிராக தீர்மானங்கள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டால் அது பேரவையின் சட்டங்களுக்கு அப்பாற் செயற்படுத்த முடியாது. ஒரு நாட்டை முழுமையாக கடந்து தீர்மானங்கள் மேற்கொள்ள முடியாது. 

அதன்படி ஐ .நாவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள அவர்களால் முடியாது போயுள்ளது. இதேவேளை, ஏதேனும் மனித உரிமைகள் இடம்பெற்றிருந்தால் அது தொடர்பில் ஜனாதிபதியினால் கொண்டுவரப்பட்ட ஆணைக்குழு ஊடாக ஆய்வுகள் முன்னெடுக்கப்படும். 

உயர் நீதிமன்ற நீதியரசர்கள் தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள குறித்த ஆணைக்குழு தொடர்ந்தும் செயற்படும். ஐக்கிய நாடுகளிள் பேரவையினால் கொண்டுவரப்பட்டுள்ள 2030 ஆம் ஆண்டுக்கான பொருளாதார அபிவிருத்தி திட்டங்களை மையமாக கொண்டு நாட்டில் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

தமிழ் சிங்களம் முஸ்லிம் ஆகிய அனைத்து மக்களுக்கும் இலங்கையின் எப்பகுதிக்கும் பயணிப்பதற்கும், தொழில் செய்வதற்கும், குடியேறுவதற்கும், தற்போது சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. மேலும் பிரசைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நாடான இலங்கை தற்போது காணப்படுகின்றது” எனத் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.