துன்புறுத்தப்பட்ட குழந்தையை தத்தெடுக்க பொலிஸாருக்கு நூற்றுக்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள்!

துன்புறுத்தப்பட்ட குழந்தையை தத்தெடுக்க பொலிஸாருக்கு நூற்றுக்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள்!


யாழ். மனியந்தோட்டத்தில் அண்மையில் பெற்ற குழந்தையை துன்புறுத்திய தாய் பற்றிய செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் பாதிக்கப்பட்ட குழந்தையை தத்தெடுப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புக்கள் பொலிஸாருக்கு கிடைத்திருக்கின்றன.

உள்நாட்டிலும் அதேபோல வெளிநாடுகளிலும் இருந்து இவ்வாறு தொலைபேசி அழைப்புக்கள் கிடைத்ததாக யாழ். பொலிஸ் தலைமையகத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகராகிய பிரசாத் பெர்ணான்டோ தெரிவிக்கின்றார்.

குழந்தைகள் இல்லாத பெற்றோரே இவ்வாறு அந்தக் குழந்தையை பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விசேடமாக ஐரோப்பா நாடுகளில் வாழ்கின்ற புலம்பெயர்ந்தவர்களே இவ்வாறு குழந்தையை தத்தெடுப்பதற்குக் கோரியிருக்கின்றனர்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post