கட்டுநாயக்க நகரில் பெண்ணொருவர் செய்த கீழ் தரமான செயல்!

கட்டுநாயக்க நகரில் பெண்ணொருவர் செய்த கீழ் தரமான செயல்!

கட்டுநாயக்கவில் உள்ள பிரபல பாபர் நிலையம் ஒன்றுக்குள் பலவந்தமாக நுழைந்து கொள்ளையடித்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் , பாபர்உரிமையாளரை கத்தியால் குத்தியதுடன், அவரது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியையும் கொள்ளையடித்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண் எதிர்வரும் 29ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் வட்டரெக்க பானலுவ பிரதேசத்தை சேர்ந்த சந்தமாலி பிரியங்கிக்கா என்ற 34 வயதுடைய பெண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை குறித்த பெண்ணுடன் வந்த இன்னொருவரை பொதுமக்கள் தாக்கியமையினால் வாக்குமூலம் வழங்க முடியாத ஆபத்தான நிலைமையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றர்.

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.