கோவிலில் கொரோனா கொத்தணி உருவாக்கம் - பலர் தனிமைப்படுத்தலில்!

கோவிலில் கொரோனா கொத்தணி உருவாக்கம் - பலர் தனிமைப்படுத்தலில்!

மஸ்கெலியாவில் 11 கொரோனா தொற்றாளர்கள் இன்று (2) அடையாளம் காணப்பட்டுள்ளதாக மஸ்கெலியா சுகாதார மருத்துவ அதிகாரி டி. சந்திரராஜன் தெரிவித்தார்

தொற்றாளர்கள் 11 பேரும் மஸ்கெலியா ஸ்ரீ சன்முகநாதன் இந்து கோவிலுடம் தொடர்பானவர்கள் என்று மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.

கோவிலில் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டிருந்த சன்முகநாதன், கோவிலின் நிர்வாகக் குழுவின் அதிகாரி ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்துள்ளார்.

இறந்தவர் மீது நிகழ்த்தப்பட்ட ஆன்டிஜென் மற்றும் பி.சி.ஆர் சோதனைகளின்படி, அவருக்கு கொரோமா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதன்பிறகு கோவிலின் பிரதான பூசாரி கொரோனா தொற்றுக்கு உள்ளானது தெரிய வந்தது.

அவர்களுடம் தொடர்பில் இருந்த 35 பேரின் பி.சி.ஆர் பரிசோதனையின்படி, 11 பேர் கொரோனா தொற்றுக்கி இலக்காகியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.

தொற்றாளர்களை இனங்காண்பதற்கு இந்து கோவில் மற்றும் மஸ்கெலியாவில் உள்ள 04 கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

தொற்றாளர்களுடன் தொடர்புடைய 33 நபர்கள் தனிமைப்படுத்தலின் கீழ் வைக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா சுகாதார மருத்துவ அதிகாரி டி. சந்திரராஜன் மேலும் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.