ஷேக் ஹசீனாவின் அழைப்பி பேரில் பங்களாதேஷ் புறப்பட்டார் பிரதமர்!

ஷேக் ஹசீனாவின் அழைப்பி பேரில் பங்களாதேஷ் புறப்பட்டார் பிரதமர்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (19) காலை பங்களாதேஷ் புறப்பட்டுச் சென்றார்.

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அழைப்பி பேரில் அங்கு விஜயம் செய்யும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று 19 மற்றும் நாளை 20ஆம் திகதிகளில் பங்களாதேஷில் தங்கியிருப்பதுடன் அந்நாட்டின் தேச பிதாவான ஷெய்க் முஜிபுர் ரஹ்மானின் ஜனன தின நூற்றாண்டு

விழாவிலும் பங்களாதேஷ் சுதந்திர பொன்விழா நிகழ்வுகளிலும் விசேட அதிதியாக கலந்து கொண்டு விசேட உரை நிகழ்த்தவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின்போது பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, அந்நாட்டின் ஜனாதிபதி முகமது அப்துல் ஹமீத், வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் அந்நாட்டின் மத்திய வங்கி ஆளுநர் ஆகியோருடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார்.

அதற்கிணங்க இருநாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த விவசாயம்,தொழில், கல்வி, சுகாதாரம் மற்றும் கலாசார ஒத்துழைப்பு ஆகிய துறைகள் தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் இதன்போது கைச்சாத்திடப்பட்டவுள்ளன.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post