இரண்டு மூன்று நாட்களாக கதறிய பாத்திமா ரிஸ்கா - பரிதாபமாய் பலி!

இரண்டு மூன்று நாட்களாக கதறிய பாத்திமா ரிஸ்கா - பரிதாபமாய் பலி!

அன்ரி அடிக்காதீங்க, அடிக்காதீங்க எனக் கடந்த இரண்டு, மூன்று நாட்களாக, கதறியழும் குரல் கேட்குமெனத் தெரிவித்த பிரதேசவாசிகள், வீட்டுக்குள் செல்லமுடியாது என்பதால், என்ன செய்வதென்றே தெரியாமல் இருந்தோம் என்றனர்.

எங்களுக்கும் பிள்ளைகள் இருக்கின்றனர். ஆனால், அச்சிறுமி கதறுவது எங்களுக்கு கேட்கும், மற்றுமொரு வீடும் அப்பெண்ணுக்கு உள்ளது. அந்த வீட்டுக்கும் சிறுமியை அழைத்துச் சென்று அடித்துள்ளார் என்றனர்.

பேயோட்டுவதாகக் கூறி, ஒன்பது வயதான சிறுமியைப் பிரம்பால் அடித்தமையால் அச்சிறுமி உயிரிழந்துள்ளார். இதுதொடர்பில், பிரதேசவாசிகள் கருத்துரைக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

இறுதியாகப் பொலிஸாரின் அவசர தொலைபேசி இலக்கமான 119க்கு அழைப்பை ஏற்படுத்தி அறிவித்தோம். பொலிஸார் வருவதற்கு முன்னரே அச்சிறுமியை வைத்தியசாலைக்கு அழைத்துக்கொண்டு, அப்பெண் புறப்பட்டாள்.

அந்தச் சிறுமிக்கு என்ன, காய்ச்சலா அல்லது டெங்கா என விசாரித்தோம். எனினும், எவ்விதமான பதிலையும் சொல்லாத அப்பெண், வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றாள். ஆனால், அச்சிறுமியின் உடலில், பிரம்பால் அடித்திருந்தமைக்கான தழும்புகள் இருந்தன.

-JaffnaMuslim

👇 Click Here

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.