கொழும்பில் சூட்கேஸ் சடலம்; வெளியான அதிர்ச்சி தகவல்!!

கொழும்பில் சூட்கேஸ் சடலம்; வெளியான அதிர்ச்சி தகவல்!!


கடந்த 01ஆம் திகதி கொழும்பு டாம் வீதியில் காணப்பட்ட சூட்கேஸ் ஒன்றினுள் இருந்து  தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பெண் குருவிட பகுதியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலும், சூட்கேஸை எடுத்து வந்த சந்தேக நபர் புத்தல பொலிஸ் நிலைய உப பொலிஸ் அதிகாரி (Sub Inspector) என தெரிய வந்துள்ளது.

$ads={1}

சந்தேக நபரான பொலிஸ் அதிகாரியை கைது செய்ய தீவிர தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


Updated


52 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், தனது படல்கும்புற வீட்டில் இருந்து தலைமறைவாகியுள்ளார்.


குருவிட்ட - தெப்பாகம பகுதி யுவதி ஒருவருடன் காதல் தொடர்பு இவருக்கு இருந்ததாகவும், நேற்று முன்தினம் ஹங்வெல்ல பகுதி ஹோட்டலுக்கு இந்த யுவதியை அழைத்த இவர் அங்கு யுவதியை படுகொலை செய்துள்ளார் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


யுவதியின் தலையை வீசிவிட்டு உடலை மட்டும் கொழும்புக்கு எடுத்துவந்த இந்த நபர், தஙகியிருந்த ஹோட்டலின் உரிமையாளரை தொலைபேசியில் தொடர்புகொண்டு இந்த விடயத்தை வெளியில் கூறினால் கொலை செய்வதாக எச்சரித்துள்ளார்.


எவ்வாறாயினும் தலைமறைவான இவரை தேடி விசேட பொலிஸ் குழுக்கள் விரைந்துள்ளன.


தாம் பெரிய தவறொன்றை செய்துவிட்டதாகவும் பொலிஸ் தன்னை நெருங்கினால் தற்கொலை செய்துகொள்வதாகவும் கூறி இவர் எழுதிய கடிதமொன்றும் அவரது வீட்டில் இருந்து சிக்கியுள்ளது.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.