வீதி விபத்து ஏற்படுத்தி ஓர் உயிரை பறித்த குசால் மெண்டிஸுக்கு நீதிபதி அறிவுரை!

வீதி விபத்து ஏற்படுத்தி ஓர் உயிரை பறித்த குசால் மெண்டிஸுக்கு நீதிபதி அறிவுரை!


வீதி விபத்து ஏற்படுத்தி  ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக கிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு பாணந்துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று (24) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஏனையவர்களுக்கு அசௌகரியம் ஏற்படும் வகையில் செயற்படக் கூடாது எனவும், ஏனையவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டுமெனவும் நீதவான், குசல் மெண்டிஸிற்கு அறிவுரை வழங்கியுள்ளார்.


விபத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்தினர் விபத்து வழக்கிற்கு பிரிம்பாக நட்டஈடு வழக்குத் தாக்கல் செய்து நட்ட ஈடு பெற்றுக்கொள்ள முடியும் என நீதவான் தெரிவித்துள்ளார்.


அண்மைக்காலமாக இலங்கை அணியின் சார்பில் விளையாடிய போட்டிகளில் மெண்டிஸ் சோபிக்கத் தவறியதனால் தற்பொழுது நடைபெற்று வரும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டித் தொடரில் மெண்டிஸிற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும், நீதிமன்ற காவலில் இருந்த குசால் மெண்டிஸின் ஓட்டுநர் உரிமத்தை ரூ. 50 ஆயிரம் பிணையில் விடுவிக்க பாணந்துறை மேலதிக நீதிபதி கட்டளை பிறப்பித்தார்.


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.