இலங்கையில் இருந்து பயணிப்பவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை தேவையில்லை! கத்தார் ஏர்வேஸ் அறிவிப்பு!

இலங்கையில் இருந்து பயணிப்பவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை தேவையில்லை! கத்தார் ஏர்வேஸ் அறிவிப்பு!


கத்தார் ஏர்வேஸ் தனது பயணிகளுக்கான RT-PCR பரிசோதனை அறிக்கை தேவையை புதுப்பித்துள்ளது. அதனடிப்படையில் 13 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு கடந்த மார்ச் 16ஆம் திகதி அமுலுக்கு வரும்வகையில் பிசிஆர் பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டிய தேவை இல்லை என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. 


முன்னதாக கத்தார் ஏர்வேஸில் கத்தாருக்கு பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும் RT- PCR பரிசோதனை அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க வேண்டியிய தேவை இருந்தது. இந்நிலையிலேயே குறிப்பிட்ட 13 நாடுகளில் இருந்து கத்தாருக்கு பயணிப்போருக்கு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.


அதுதவிர, பயணம் செய்யும் நாடுகளின் அரசாங்க ஒழுங்குமுறையும் தொடர்ந்து பொருந்தும் எனவும் தெரிவித்துள்ளது.


அதன்படி, இலங்கை, ஆர்மீனியா, பங்களாதேஷ், பிரேசில், இந்தியா, இரான், இராக், நேபால், நைஜீரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், ரஷ்யா, தன்சானியா போன்ற நாடுகளுக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


-எம்.எம். அஹ்மத்


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.