கொரோனா நோய் எதிர்ப்புச் சக்தியுடன் பிறந்த முதல் குழந்தை!

கொரோனா நோய் எதிர்ப்புச் சக்தியுடன் பிறந்த முதல் குழந்தை!

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த சுகாதாரப் பணியாளர் தன்னுடைய பிரசவத்திற்கு மூன்று வாரங்களுக்கு முன்பு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்தியிருக்கிறார். மாடர்னா தடுப்பூசி போடப்பட்ட அந்த பெண்ணுக்கு தற்போது பெண்குழந்தை பிறந்துள்ளது. பிறந்த குழந்தையை பரிசோதித்ததில் குழந்தையின் உடலில் கொரோனாவுக்கான எதிர்ப்புசக்தி இயற்கையாகவே உருவாகியிருப்பது கண்டறியப்பட்டது.

இதுகுறித்து ஃபுளோரிடா அட்லாண்டிக் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு உருவான எதிர்ப்புசக்தி தாயின் நஞ்சுக்கொடி வழியாக மற்ற ஊட்டச்சத்துகளுடன் சேர்ந்து கிடைத்திருக்கவேண்டும் என்கின்றனர். ஆராய்ச்சியாளர்களான டாக்டர் பால் கில்பர்ட் மற்றும் டாக்டர் சாத் ருத்னிக் கூறுகையில், தாங்கள் இதுகுறித்த ஆராய்ச்சி செய்வது அதிர்ஷ்டவசமாக அமைந்ததாகக் கூறுகின்றனர்.

மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படாத கர்ப்பிணி தடுப்பூசி செலுத்திக்கொண்ட சில வாரங்களிலேயே குழந்தை பிறந்தும், ஆன்டிபாடிகள் குழந்தைக்கு கடத்தப்பட்டிருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது என்கின்றனர். ஆனால் இந்த நோய் எதிர்ப்பு சக்தி எவ்வளவு நாட்களுக்கு இருக்கும் மற்றும் நோய்க்கிருமியிடமிருந்து எந்த அளவுக்கு பாதுகாப்பு அளிக்கும் என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை என்கின்றனர்.

வீரியமிக்க நோயெதிர்ப்பு சக்தியுடன் பிறந்துள்ள குழந்தையின் தண்டுவட செல்கள் மற்றும் ரத்தம் பரிசோதனை செய்யப்பட்டதாக இதுகுறித்து பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.