மூன்று ஏக்கர் நிலத்தில் கஞ்சா பயிரிட்ட மூவர் அதிரடியாக கைது!

மூன்று ஏக்கர் நிலத்தில் கஞ்சா பயிரிட்ட மூவர் அதிரடியாக கைது!

கொழும்பில் விசேட அதிரடிப்படையினர் , குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் பொலிஸாரால் நேற்று மேற்கொள்ளப்பட்ட வெவ்வேறு சுற்றிவளைப்புக்களில் 3 ஏக்கர் நிலப்பரப்பில் கஞ்சா பயிரிடப்பட்டிருந்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளதோடு , ஹெரோயினுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சுற்றிவளைப்புக்கள் தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்ததாவது,

விசேட அதிரடிப்படையினரால் பாணம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் 3 ஏக்கர் நிலத்தில் கஞ்சா பயிரிடப்பட்டிருந்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

எனினும் இதனுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதால் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தப்பிச் சென்றுள்ள குறித்த சந்தேகநபர்கள் வசித்த இடத்திலிருந்து 5 தொலைபேசிகள் , 5 கிலோ கிராம் கஞ்சா மற்றும் உள்நாட்டு துப்பாக்கி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் பேலியகொடை - நுகேபார பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 205 கிராம் ஹெரோயின் , 306 கிராம் கஞ்சா, 48 000 ரூபா பணம் என்பவற்றுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் கொழும்பு - கிராண்ட்பாஸ் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 7 கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post