நாளையதினம் அமைச்சரவையில் எடுக்கப்படுகிறது முக்கிய முடிவு!

நாளையதினம் அமைச்சரவையில் எடுக்கப்படுகிறது முக்கிய முடிவு!


மாகாண சபை தேர்தலை எப்போது நடத்துவது என்பது குறித்து நாளையதினம் (29) அமைச்சரவை முடிவெடுக்கும் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.


எந்த தேர்தல் முறையின் கீழ் தேர்தல் நடைபெறப்போகிறது என்பதை அமைச்சரவை முடிவு செய்யும்.


இந்த விவகாரம் தொடர்பாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டாரா தென்னக்கூன் கடந்த வாரம் அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.


அனைத்து சபைகளின் பதவிக்காலம் 2013 முதல் பல்வேறு கட்டங்களில் காலாவதியாகிவிட்டதால் மாகாண சபை தேர்தல்கள் இப்போது இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்படாமல் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post