நாட்டில் இன்று மேலும் ஒரு மரணம் பதிவானது!

நாட்டில் இன்று மேலும் ஒரு மரணம் பதிவானது!


கொரோனா தொற்றால் அடையாளம் காணப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித் துள்ளது.


அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 526 ஆக உயர்ந்துள்ளது.


கனத்தேவெவ பகுதியைச் சேர்ந்த 48 வயதான பெண் ஒருவர், குருணாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து ஹோமாகம வைத்தியசாலைக்கு மாற்றப் பட்டு அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா, மற்றும் இரத்தம் விஷமானமை காரணமாக 2021 மார்ச் மாதம் 12 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.


அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 526 ஆக உயர்ந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post