ஆறு இலட்சம் சீன கொரோனா தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்தன!

ஆறு இலட்சம் சீன கொரோனா தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்தன!

சீனாவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள 6 இலட்சம் Sinopharm கொரோனா தடுப்பூசிகள் இன்று (31) காலை 11:20 மணியளவில் ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் யுஎல்869 எனும் விமானத்தில் இலங்கையை வந்தடைந்தன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச குறித்த கொரோனா தடுப்பூசிகளை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பெற்றுக்கொண்டார்.

இதற்கமைய, குறித்த கொரோனா தடுப்பூசிகள் சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் பாலித கொஹொனவிடம் நேற்று கையளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் சீன ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைய, குறித்த தடுப்பூசிகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதாக, சீனாவுக்கான இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்த தடுப்பூசிகள் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு உறுதுணையாக அமையும் என, சீனா தெரிவித்துள்ளது.

அத்துடன் , இதுவரை 50 நாடுகள் Sinopharm கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளதாகவும், சீனா சுட்டிக்காட்டியுள்ளது.

100 மில்லியன் Sinopharm கொரோனா தடுப்பூசிகள் சர்வதேச ரீதியில் இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் 80 மில்லியன் கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் சீனா தெரிவித்துள்ளது.

இதேவேளை, சீன தடுப்பூசியினை இலங்கையில் உள்ள சீன பிரஜைகளுக்கு வழங்குவதற்கான அனுமதியினை அண்மையில் தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபை வழங்கியிருந்தது.

அதன்படி, குறித்த தடுப்பூசியானது இலங்கையில் வசிக்கும் சீன பிரஜைகளில் ஒரு சதவீதத்தினருக்கு மாத்திரமே வழங்கப்படும் என இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், சீனாவின் Sinopharm தடுப்பூசியினை நாட்டில் அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதிப்பது குறித்த இறுதித் தீர்மானம் இதுவரை எட்டப்படவில்லை தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post