க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய 56 மாணவர்களுக்கு கொரோனா - அமைச்சர் ஜி.எல். பீரிஸ்

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய 56 மாணவர்களுக்கு கொரோனா - அமைச்சர் ஜி.எல். பீரிஸ்

கொரோனா தொற்றுக்கு இலக்கான 56 மாணவர்கள் இந்த ஆண்டு க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றியதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

நாடு முழுவதுமாக அமைக்கப்பட்ட 40 சிறப்பு பரீட்சை மையங்களில் அவர்கள் பரீட்சைக்கு தோற்றியதாகவும் அவர் தெரிவித்தார்.

ஒவ்வொரு பரீட்சை மண்டபத்திலும் சிறப்பு வகுப்பறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 321 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு இம்முறை மொத்தமாக 622,305 மாணவர்ள் தோற்றியதாகவும், 4,500 க்கும் மேற்பட்ட பரீட்சை மண்டபங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post