எதிர்வரும் 31ஆம் திகதி நாட்டின் சில பகுதிகளில் 18 மணிநேர நீர் வெட்டு!

எதிர்வரும் 31ஆம் திகதி நாட்டின் சில பகுதிகளில் 18 மணிநேர நீர் வெட்டு!

எதிர்வரும் 31ஆம் திகதி நாட்டின் சில பகுதிகளில் 18 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி வத்தளையில் சில பகுதிகளில் மார்ச் 31 ஆம் திகதி இரவு 10.00 மணி முதல் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி மாலை 04.00 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது என தேசிய நீர் வழங்கல் வடி கால மைப்புச் சபை தெரிவித்துள்ளது.

வனவாசல, ஒலியமுல்ல, வத்தளை, நீர் கொழும்பு வீதி, எவரிவத்த வீதி, தெலங்கபாத், மீகஹவத்த, ஹேக்கித்த, பள்ளியாவத்த, வெலியமுன வீதி, பலகல, கலக ஹடுவ, மருதான வீதி, எலகந்தவின் ஒரு பகுதிக்கு இவ்வாறு 18 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

ஹேக்கித்த வீதியிலுள்ள நீர் குழாய் அமைப்பின் திருத்தப் பணிகள் காரணமாகவே நீர் வழங்கல் நடவடிக்கையானது இவ்வாறு தடை செய் யப்படவுள்ளதாகத் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரி வித்துள்ளது.

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.