நாட்டுச் சட்டத்திற்கு புறம்பாக இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 3,000 மெட்ரிக் டொன் அரிசி மூட்டைகளுக்கு நடக்கப்போவது இது தான்!

நாட்டுச் சட்டத்திற்கு புறம்பாக இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 3,000 மெட்ரிக் டொன் அரிசி மூட்டைகளுக்கு நடக்கப்போவது இது தான்!

நாட்டுச் சட்டத்திற்கு புறம்பாக இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 3,000 மெட்ரிக் டொன் அரிசியினை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி பணிக்குழுவின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சுமார் 3,000 மெட்ரிக் டன் அரிசியினை சதொச நிறுவனத்தினூடாக மக்களுக்கு விநியோகிக்க திட்டமொன்றினை வகுக்க முடியுமா என்று பிரதமர் தலைமையில் நடைபெற்ற மறுஆய்வு கலந்துரையாடலில் கலந்து கொண்ட திரு. பசில் ராஜபக்ஷ அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பான தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுக்குமாறு சுங்க இயக்குநர் ஜெனரல் ஜி.வி. ரவிப்ரியவுக்கு பிரதம்ர் அறிவுறுத்தினார்.

மேலும் நெல் சந்தைப்படுத்தல் வாரியத்திற்கு சொந்தமான அரிசியினை சந்தைப்படுத்துவது மற்றும் உள்ளூர் அரிசி வியாபாரிகளிடமிருந்து மேலும் 25,000 மெட்ரிக் டொன் கொள்வனவு செய்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

நாட்டில் அரிசி பற்றாக்குறை இல்லை என்றும், நுகர்வுக்கு போதுமான அரிசி நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி பணிக்குழுவின் தலைவர் திரு. பசில் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post