30 ரூபாய் வாழைப்பழம்; பறிபோன ஒரு உயிர்! குருநாகலில் சம்பவம்!

30 ரூபாய் வாழைப்பழம்; பறிபோன ஒரு உயிர்! குருநாகலில் சம்பவம்!

வா​ழைப்பழம் ஒன்றினால் ​ஹோட்டல் ஊழியரின் உயிர் அநியாயமாக காவுக்கொள்ளப்பட்ட சம்பவமொன்று, குருநாகல் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

அந்த ஹோட்டலில் வாழைப்பழமொன்றை கொள்வனவு செய்த நுகர்வோர், வாழைப்பழத்தின் விலை அதிகமாகும் என ஹோட்டலில் குழப்பம் விளைவித்துள்ளார்.

அந்த வாழைப்பழத்தின் உண்மையான பெறுமதி 30 ரூபாயாகும். அதனையே ஹோட்டல் உரிமையாளரும் தெரிவித்துள்ளார். எனினும், விலையை ஏற்றுக்கொள்வதற்கு நுகர்வோர் மறுத்துவிட்டார்.

வாழைப்பழத்தின் விலையைக் கேட்டு கடுமையாக கோபமடைந்த அந்த நபர், வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், கைகலப்பிலும் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது விவரத்தை கேட்பதற்கு ஹோட்டல் ஊழியர் வருகைதந்துள்ளார். அப்போது, அங்கிருந்த போத்லொன்றை உடைத்து குத்திவிட்டு, அந்நபர் தப்பியோடிவிட்டார். அவ்வாறு ​ஓ​டியவர், தொலைபேசி கூடாரமொன்றுக்குள் மறைந்துகொண்டுள்ளார். 

எனினும், அங்கிருந்தவர்கள் அவரை மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

போத்தல் குத்துக்கு இலக்கானவர், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டார்.
கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.