கண்டம் விட்டு கண்டம் பாயும் 2 ஏவுகணைகளை ஏவி வடகொரியா சோதனை!

கண்டம் விட்டு கண்டம் பாயும் 2 ஏவுகணைகளை ஏவி வடகொரியா சோதனை!


கண்டம் விட்டு கண்டம் பாயும் இரண்டு ஏவுகணைகளை ஏவி வடகொரியா சோதனை செய்துள்ளது.

இந்த ஏவுகணைகள் உள்ளூர் நேரப்படி நேற்று (25) காலை 7.06 மணிக்கும், 7.25 மணிக்கும் வட கொரியாவின் கிழக்கு கடற்கரையில் உள்ள ஒரு பகுதியில் இருந்து ஏவப்பட்டதாகவும், அவை 450 கி.மீ. தொலைவுக்கு பறந்து கடலில் விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஏவுகணை சோதனைக்கு அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

அதே நேரத்தில் இந்த ஏவுகணைகளின் சிதைவுகள் எதுவும் தங்கள் கடல் பகுதியில் விழவில்லை என்றும் ஜப்பான் கூறியுள்ளது.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.