“சேன மில்ஸ்” இறக்குமதி செய்த எண்ணெய்யினை நுகர்வோருக்கு விநியோகம் செய்ய அனுமதி - 26 அன்று இருந்த நச்சுத்தன்மை நேற்று மாயமானது!

“சேன மில்ஸ்” இறக்குமதி செய்த எண்ணெய்யினை நுகர்வோருக்கு விநியோகம் செய்ய அனுமதி - 26 அன்று இருந்த நச்சுத்தன்மை நேற்று மாயமானது!

இலங்கைக்கு தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்யும் 'சேன மில்ஸ் சுத்திகரிப்பு நிலையத்தின்' தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு, அஃப்லாடாக்சின் தர சோதனையில் தேர்ச்சி பெற்றதாக இலங்கை தர நிர்ணய நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, குறித்த நிறுவனத்தின் தேங்காய் எண்ணெயை சந்தைக்கு வெளியிடுமாறு தர நிர்ணய நிறுவனம் இலங்கை சுங்கத்திற்கு தெரிவித்துள்ளது.

இருப்பினும், புற்றுநோய் தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்யும் நிறுவனங்களில் சேன மில்ஸ் சுத்திகரிப்பு நிலையமும் இருப்பதாக 26 ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையில் தரநிலை நிறுவனம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், குறித்த நிறுவனம் இதற்கு சம்பந்தப்படவில்லை என்று தர நிர்ணய நிறுவன இயக்குநர் ஜெனரல் நேற்று (30) தெரிவித்தார்.

அலி பிரதர்ஸ் பிரைவேட் லிமிடெட், எதிரிசிங்க ஒய்ல்ஸ், கட்டான எண்ணெய் நிறுவனம் ஆகியவை இறக்குமதி செய்த  தேங்காய் எண்ணெய்யில் அதிக அளவில் விசத்தன்மை இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post