பதுளை – பசறையில் மற்றுமொரு கோர விபத்து! 100 அடி பள்ளத்தில் பாய்ந்த லொறி!

பதுளை – பசறையில் மற்றுமொரு கோர விபத்து! 100 அடி பள்ளத்தில் பாய்ந்த லொறி!


பசறை பதுளை பிரதான வீதியில் பாரவூர்தி ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்ததில் சாரதி உட்பட மேலும் இரண்டு பேர் கடும் காயங்களுக்கு உள்ளாகி பதுளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 


இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


இதேவேளை பதுளை – பசறை, 13ஆம் கட்டை பகுதியில் 200 அடி பள்ளத்தில் பேருந்து ஒன்று விழுந்து 15 பேர் உயிரிழந்திருந்தனர்.


இந்த சோகம் மறைவதற்குள் குறித்த பகுதியில் தொடர்ந்து விபத்து நடைபெற்று வருகின்றது.


அந்த வகையில் லொறி ஒன்று 100 அடி பள்ளத்தில் விழுந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post