100இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்ட ஃபேஸ்புக் மது விருந்து - பல இலட்சம் பெறுமதியான மதுபானம் !

100இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்ட ஃபேஸ்புக் மது விருந்து - பல இலட்சம் பெறுமதியான மதுபானம் !

மாத்தறை - மிரிஸ்ஸ பகுதியில் பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு மது விருந்தில் அதிகாரிகளால் விசேட சோதனை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வெளிநாட்டு மதுபானம் 57,250 மில்லி லீட்டருடன் விருந்தை ஏற்பாடு செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்பெறுமதி சுமார் 5 இலட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1913 என்ற அவசர தொலைபேசி எண்ணுக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து இந்த சோதனை நடத்தப்பட்டது.

இது 20 முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களை இலக்காகக் கொண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் இதில் சுமார் 100 இளைஞர்கள் வரை கலந்து கொண்டனர் என்று தென் மாகாண சிறப்பு கலால் செயல்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post