மேலுமொரு 07 வார சிசு கொரோனா தொற்றுக்கு இலக்காகி பலி!

மேலுமொரு 07 வார சிசு கொரோனா தொற்றுக்கு இலக்காகி பலி!


பொரளை - லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த சுமார் 07 வார சிசுவொன்று கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


பதுளை - வெலிமட பிரதேசத்தை சேர்ந்த குறித்த சிசு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


நோய் நிலைமை காரணமாக சிசு கடந்த தினம் வெலிமட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் சிசுவிற்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளது.


$ads={1}


பின்னர் வெலிமட வைத்தியசாலையில் இருந்து பதுளை பொது வைத்தியசாலைக்கு சிசு மாற்றப்பட்டுள்ள நிலையில், இதன்போது சிசுவின் இதயத்தில் நீர் நிறைந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.


பின்னர் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் சிசுவிற்கு கொரோனா தொற்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.