இன்றும் ஜனாஸா நல்லடக்க பணிகள் முன்னெடுப்பு! இதுவரை 07 ஜனாஸாக்கள் நல்லடக்கம்!

இன்றும் ஜனாஸா நல்லடக்க பணிகள் முன்னெடுப்பு! இதுவரை 07 ஜனாஸாக்கள் நல்லடக்கம்!


கொரோனா காரணமாக உயிரிழந்த ஜனாசாக்களை அடக்கம் செய்யும் பணி இரண்டாவது நாளாகவும் ஓட்டமாவடி பிரதேசத்தில் முன்னெடுக்கப்படுகிறது.


இன்றைய தினம் இதுவரை மாளிகாவத்தை பகுதியை சேர்ந்த ஒருவரது ஜனாஸாவும், 

நிட்டம்புவ பகுதியை சேர்ந்த மூன்று ஜனாஸாக்களும், கஹட்டோவிட்ட பகுதியை சேர்ந்த  ஒருவரதும், பம்மன்ன மற்றும் திஹாரிய பகுதிகளை சேர்ந்த தலா ஒருவரது  ஜனாஸாக்களுமாக  07 ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், தற்போது அநுராதபுரத்தில் இருந்து ஒரு ஜனாசா அண்மித்துள்ளதுடன், கண்டி மாவட்டத்தில் மேலும் 04 ஜனாசாக்களும் இன்று மாலை அங்கிருந்து புறப்படும் என தெரிவிக்கப்படுகிறது.


அதன் பிரகாரம் இன்றைய தினம் ஏற்கனவே அடக்கப்பட்ட 07 ஜனாசாக்களுடன் சேர்த்து மொத்தம் 12 ஜனாசாக்கள் அடக்கம் செய்யப்படும் என எதிர்பார்ப்பதாக முன்னாள் அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா அங்கிருந்து தெரிவித்தார்.


$ads={1}


குறித்த பணிகளில் மௌலானா அவர்கள் தொடர்ந்தும் ஆரம்பம் முதலே செயற்பட்டு வருவதுடன் இரண்டாவது நாளான இன்றைய தினமும் களத்தில் நின்று உறவுகளது துயரில் பங்கெடுப்பது குறிப்பிடத்தக்கது.


ஓட்டமாவடி சூடுபத்துனசேனை பகுதியில் நேற்றைய தினம் 09 ஜனாஸாக்களும், இன்றைய தினத்தில் இதுவரை அடக்கப்பட்ட 07 ஜனாஸாக்களையும் சேர்த்து 16 ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், அடக்கம் செய்யும் பணி இன்று இரவு வரை தொடர உள்ளதாகவும் களத்தில் செயலாற்றும் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் தெரிவித்தார்.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.