பாகிஸ்தான் உட்பட 04 நாடுகளைச் சேர்ந்த பெண்களை திருமணம் செய்ய சவூதி அந்நாட்டு ஆண்களுக்கு தடை!

பாகிஸ்தான் உட்பட 04 நாடுகளைச் சேர்ந்த பெண்களை திருமணம் செய்ய சவூதி அந்நாட்டு ஆண்களுக்கு தடை!


பாகிஸ்தான், பங்களாதேஷ், சாத் (Chad) மற்றும் மியான்மர் ஆகிய 04 நாடுகளைச் சேர்ந்த 5 லட்சம் பெண்கள் சவூதி அரேபியாவில் வசிப்பதாகக் கூறப்படுகிறது.


இந்நிலையில், இந்த 04 நாடுகளைச் சேர்ந்த பெண்களை திருமணம் செய்ய சவூதி அரேபிய ஆண்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இந்த 04 நாடுகளின் பெண்களை திருமணம் செய்ய விரும்பும் சவூதி அரேபிய ஆண்கள் இனி கடும் கட்டுப்பாடுகளை சந்திக்க நேரிடும் என அந்நாட்டின் மக்கா நகர காவல்துறை இயக்குநர் மேஜர் ஜெனரல் அசாப் அல்-குரேஷி கூறியதாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.


பாகிஸ்தான் உள்ளிட்ட 04 நாடுகளின் பெண்களை திருமணம் செய்ய விரும்பும் ஆண்கள் முறைப்படி அரசுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதைப் பரிசீலித்து அனுமதி வழங்கினால் மட்டுமே திருமணம் செய்துகொள்ள முடியும்.


விவாகரத்து பெற்ற ஆண்கள் அடுத்த 06 மாதங்கள் வரை வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்கு விண்ணப்பிக்க முடியாது.


25 வயதுக்கு மேற்பட்டவராக இருப்பதுடன் அதை உறுதிப்படுத்தும் வகையில் மாவட்ட மேயரால் வழங்கப்பட்ட ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும். அடையாள ஆவணம், குடும்பத்தினர் பற்றிய விவரங்களையும் தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.


https://www.opindia.com/2021/03/saudi-arabia-strict-rules


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.