VIDEO : வீட்டை தூக்கிச் செல்லும் இந்தியர்கள்; ஆச்சரியமூட்டும் வீடியோ!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO : வீட்டை தூக்கிச் செல்லும் இந்தியர்கள்; ஆச்சரியமூட்டும் வீடியோ!

இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தில் கிராம் ஒன்றிலுள்ள மக்கள் ஒரு வீட்டையே கைகள் மூலம் தூக்கிச் செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.

நாகாலாந்து மாநிலம் லாங்லெங் மாவட்டத்தில் உள்ள கிராமம் யாசெம். இங்கு ‘போம் நாகா’ இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் வீடுகள் மிகவும் எளிய முறையில் கட்டப்பட்டிருக்கும்.

இந்நிலையில், கிராமத்தில் இருந்த வீடு ஒன்றை வேறு பகுதிக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர். இதற்கான காரணம் என்னவென்று சரியாக தெரியவில்லை. இந்த வீடு மரக்கட்டைகளைக் கொண்டு மேற்புறம் அட்டையால் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் வீட்டை தூக்கிச் செல்வதற்கு வசதியாக சுற்றிலும் மூங்கில் குச்சிகளை வைத்து கட்டியுள்ளனர்.

பின்னர் கிராம மக்கள் 50 பேர் சேர்ந்து கொண்டு அந்த வீட்டை அப்படியே தூக்கியுள்ளனர். இதனை வேறொரு பகுதிக்கு அனைவரும் தூக்கிச் சென்றுள்ளனர். எடையை தாக்குப் பிடிக்கும் வண்ணம் சுழன்ற படியே கிராம மக்கள் வீட்டை தூக்கிச் சென்றனர். இதனை அதே ஊரைச் சேர்ந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.

இது சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதைக் காணும் பலரும் அப்படியே ஆச்சரியத்தில் உறைந்துள்ளனர். இவ்வாறு எளிதில் தூக்கிச் செல்வதற்கு காரணம், அதன் இலகுரக கட்டுமானப் பொருட்கள் காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

அண்மையில் நாகாலாந்தில் பேக் மாவட்டத்தில் உள்ள குட்சபோ கிராமத்தில் பள்ளத்தாக்கில் விழுந்த ட்ரக் ஒன்றை நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்று சேர்ந்து கயிற்றைக் கட்டி மேலே இழுக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

நன்றி : சமயம் 



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.