போதைப்பொருள் கடத்தல் காரரான 'கிம்புலா எலா குணா' கைது!

போதைப்பொருள் கடத்தல் காரரான 'கிம்புலா எலா குணா' கைது!

தமிழீழ விடுதலை புலிகளுடன் தொடர்பு கொண்டிருந்ததாக கூறப்படும் பிரபல போதைப்பொருள் கடத்தல் காரரான 'கிம்புலா எலா குணா' என அழைக்கப்படும் சின்னையா குணசேகரன் இந்தியாவின் சென்னையில்‍ வைத்து கைதாகியுள்ளார்.

சென்னை விமான நிலையத்திலிருந்து டில்லிக்கு புறப்படுவதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டபோது அவரும், அவரது மூன்று உதவியாளர்களும் ஞாயிற்றுக்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்திற்கு தப்பிச் செல்வதற்கு முன்பு, குணா இலங்கையில் ஒரு பெரிய போதைப்பொருள் வியாபாரி ஆவார்.

1999 ஆம் ஆண்டில் அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்காவை கொலைசெய்வதற்கான தமிழீழ விடுதலை புலிகளின் தோல்வியுற்ற முயற்சியில் அவர் பங்கேற்றதாகவும் கூறப்படுகிறது.

அதன் பின்னர் அவர் போலி ஆவணங்களை சமர்ப்பித்து தமிழகத்துக்கு தப்பிச் சென்றார்.

எவ்வாறெனினும் ஞாயிற்றுக்கிழமை உளவுத்துறையின் தகவல் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட இவர்கள் தற்போது தடுப்புக் காகவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் அவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.