பொலிஸ் அதிகாரிகளை தாக்கிய சந்தேக நபர்கள் - OIC மருத்துவமனையில்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொலிஸ் அதிகாரிகளை தாக்கிய சந்தேக நபர்கள் - OIC மருத்துவமனையில்

File Photo
அலுத்கம மொரகல்ல, மருதானையில் வீடொன்றின் உரிமம் பற்றிய நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதற்காக நீதிமன்ற உத்தியோகத்தர்களுடம் சென்ற, ​​ஓ.ஐ.சி அசோக கருணாரத்ன உட்பட பல பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கியதன் காரணமாக இரு பெண்கள் உட்பட மூன்று ஆண்களுடன் ஐவரை அலுத்கம பொலிசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 55-60 வயதுடைய சந்தேக நபர்கள் இன்று (2) களுத்துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

அலுத்கம பொலிசாரிஜ் ஓ.ஐ.சியின் இடது கையில் காயங்களுடன் அலுத்கம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஒ.பி.டி.யில் (வெளி நோயாளர் பிரிவு) சிகிச்சை பெற்ற பின்னர் மருத்துவமனையை விட்டு வெளியேறிதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வீட்டுடன் காணப்படும் நிலம் தொடர்பான வழக்கில் களுத்துறை மாவட்ட நீதிமன்றத்தில் இடம்பெற்ற நீண்ட விசாரணைகளுக்கு பின்னர், அலுத்கம பொலிசார் நீதிமன்ற அதிகாரிகளுடன் குறித்த வீட்டிற்குச் சென்றபோது உடைமைகளை உரிமையாளரிடம் ஒப்படைக்கும் சந்தர்ப்பத்தில், சந்தேகநபர்கள் கலகத்தனமாக நடந்து கொண்டுள்ளனர்.

நீதித்துறை அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு, நீதிமன்ற அவமதிப்பு மற்றும் தாக்குதல் ஆகிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களும் களுத்துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.