
கடந்த 31 ஆம் திகதி சிகிச்சைக்காக வந்த குறித்த நீரிழ்வு நோயாளி டிக்கோயா அடிப்படை மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட பின்னர் விரைவான ஆன்டிஜென் பரிசோதனையிலிருந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தொற்றுக்குள்ளான நபரின் மருமகள் ஹட்டன் போஸ்கோ கல்லூரியில் ஆசிரியராக கடமை புரிகின்றார்.
தற்போது, பொகவந்தலாவ பிராந்திய மருத்துவமனையில் புதிதாக நோயாளிகள் அனுமதிக்கப்படுவது இடை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் சிகிச்சை பெற்று வரும் அனைத்து நோயாளிகளுக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
பொகவந்தலாவ சுகாதார அலுவலரின் அறிவுறுத்தலின் அடிப்படையில் மருத்துவமனை மீண்டும் திறக்கப்படும் என்று பொகவந்தலாவ பிராந்திய மருத்துவமனையின் மாவட்ட மருத்துவ அலுவலர் ஏ.எஸ்.கே.ஜெயசூரியா தெரிவித்தார்.