ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் திடுக்கிடும் தகவலை வெளியிட்ட அரச தரப்பின் பிரதான அமைச்சர்!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் திடுக்கிடும் தகவலை வெளியிட்ட அரச தரப்பின் பிரதான அமைச்சர்!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத குண்டு வெடிப்பு அறிக்கை குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் மஹிந்த அமரவீர திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஞானசர தேரர் உள்ளிட்ட குழுவினராலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிகிறது என்று அவர் கூறுகிறார்.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு குறித்து விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை எதிர்பார்க்கப்படும் அடிப்படை நோக்கங்களை நிறைவேற்றியதாகத் தெரியவில்லை என்றும் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மட்டுமல்லாமல் பல அரசியல் கட்சிகளும் இந்த அறிக்கையை எதிர்க்கின்றன.

மேலும் இந்த அறிக்கையை ஸ்ரீ.சு.கட்சி நிராகரிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post