அக்கரைப்பற்று Inspiring Youths கழகத்தினரால் 73ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நிகழ்வு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அக்கரைப்பற்று Inspiring Youths கழகத்தினரால் 73ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நிகழ்வு!


அக்கரைப்பற்று Inspiring Youths கழத்தின் தலைவர் மௌலவி M.A.M. றுஷைத் அலி அவர்களின் தலைமையில் 73ஆவது சுதந்திர தின நிகழ்வு இன்று வியாழக்கிழைமை 04ஆம் திகதி காலை 10:30  மணிக்கு இடம்பெற்றது.


இந்நிகழ்வுக்கு அதிதிகளாக அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவு Sub Inspector OF Police OIC A.L.M Azeem (Crime Branch) அவர்கள் மற்றும், மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி A. முபாரக் அலி, அக்கரைப்பற்று இளைஞர்  சேவை உத்தியோகத்தர் M.M. ஸமீலுல் இலாஹி, அக்கரைப்பற்று இளைஞர் கழகங்களின் சம்மேளனத் தலைவர் M.M. றுக்சான், திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான M.K.M. ஹனிபா மற்றும் M.I. றுமைஸா, மற்றும் நகர் பிரிவு 03 கிராம உத்தியோகத்தர் S.D.M. ரிஜான் அவர்கள் மற்றும் Inspiring Youths அமைப்பின் ஆலோசகர்களான N.M. அனஸ்,மற்றும் M. H. பிர்னாஸ் ,மற்றும் M.A. சுஹைப் ஆகியோரும்  மற்றும் அமைப்பின் அங்கத்தவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.


இந்நிகழ்வின் போது தேசிய கொடி மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம்  மற்றும் Inspiring Youths இளைஞர் கழகம் ஆகியவற்றின்  கொடிகள் ஏற்றப்பட்டு சமாதான வெண் புறா ஒன்றும் பறக்கவிடப்பட்டது.


இதனை தொடர்ந்து முக்கிய நிகழ்சிகளாக போதை ஒழிப்பு நிகழ்வும்,மற்றும்  வறுமைக்குட்பட்ட குடும்பங்களுக்கான பண உதவிகளும்  மற்றும் Inspiring Youths அமைப்பினர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு, மற்றும்  ஜனாஸா வீடுகளுக்குக்கான  துஆ காட்சி நிகழ்வும் மற்றும் மர நடுகை நிகழ்வும் இடம் பெற்றது.











Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.